பிரின்ஸ் ஜுவல்லரி போப் பிரான்சிசுக்கு நினைவு பரிசு
சென்னை, வாடிகன் நகரில் நடந்த மத விழாவில், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிசுக்கு, பிரின்ஸ் ஜுவல்லரி தலைவர், வெள்ளி நினைவுப் பரிசு வழங்கி ஆசி பெற்றார்.
இத்தாலியின் வாடிகன் நகரில், அனைத்து மத மாநாட்டின் நுாற்றாண்டு விழா நடந்தது. உலகளாவிய மத தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற, பிரின்ஸ் ஜுவல்லரியின் தலைவர் பிரின்சன் ஜோஸ், இயக்குனர் ஷீபா பிரின்ஸ் ஆகியோர், போப் பிரான்சிசுக்கு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வெள்ளி நினைவு பரிசை வழங்கி, ஆசி பெற்றார்.
பிரின்ஸ் ஜுவல்லரியின் தலைவர் பிரின்சன் ஜோஸ் கூறியதாவது:
வரலாற்று சிறப்பு மிக்க விழாவில், உலகமெங்கும் உள்ள பல லட்சக்கணக்கானோருக்கு ஊக்கமளிக்கும் புனிதருக்கு, எங்களின் திறமை மிக்க கைவினைஞர்கள், மிக நுணுக்கமாக தயாரித்த பரிசை வழங்குவது, ஒரு மகத்தான பாக்கியம். அமைதியை வளர்க்கும் விதமாக நடந்த மாநாட்டில், பிரின்ஸ் ஜூவல்லரியின் பங்கேற்பு, அமைதி, ஒற்றுமைக்கு ஒரு சான்று.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரின்ஸ் ஜுவல்லரி இயக்குனர் ஷீபா பிரின்ஸ் கூறுகையில், ”இந்த வெள்ளி நினைவு பரிசு, அமைதி மற்றும் புரிதலை மேம்படுத்துவதற்கான போப்பின் அயராத முயற்சிகளுக்கு எங்கள் மரியாதை. பொது நலனுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கான நன்றியின் ஒரு சிறிய அடையாளம்,” என்றார்.