சுற்றுலா பயணியர் முகம்சுளிப்பு கடற்கரையில் அரைகுறை பணி
சென்னை, சென்னையில் ‘பெஞ்சல்’ புயல் காரணமாக, பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதில், சாலையில் தேங்கிய மழைநீரை, மோட்டார் வைத்து இறைத்து கால்வாய்கள், கூவம் ஆற்றில் மாநகராட்சியினர் வெளியேற்றினர். அதேபோல், பல்வேறு பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட குப்பை கழிவுகள், மெரினா கடற்கரையில் குவிந்து கிடந்தன.
அவற்றை அகற்றும் பணியை மேற்கொண்ட மாநகராட்சி ஊழியர்கள், அரைகுறையாக விட்டுச் சென்றுள்ளனர்.
இதனால், வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணியர், குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை பார்த்து முகம் சுளித்துச் செல்கின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.