கஸ்துாரி: ‘என்கவுன்டர் ‘ செய்தாலும் எதிர்ப்பு இருக்காது
சென்னை, அவதுாறு வழக்கில்கைதாகி, ஜாமினில் வெளியே வந்துள்ள நடிகை கஸ்துாரி, நீதிமன்ற உத்தரவுப்படி,எழும்பூர் காவல் நிலையத்தில் நேற்று கையெழுத்திட்டார்.
அப்போது, அவரது அளித்த பேட்டி:
ஆதவ் அர்ஜுனாவை வேண்டாம் என, எந்தக்கட்சியும் சொல்லக்கூடியஇடத்தில் இல்லை. எல்லா கட்சியில் உள்ளவர்களுக்கும், மார்ட்டின் குடும்பத்தார் நிதி உதவி செய்துள்ளனர். அரசியலில் எதுவும் நிலையானது கிடையாது.
மனநலம் குன்றிய குழந்தையை, கடவுளுடைய குழந்தையாகத்தான் நாம் பார்க்க வேண்டும். தவறே செய்யாதவர்களை எல்லாம் தனிப்படை வைத்து, காவல் துறையினர் தேடி வருகின்றனர்; நான் என்னை சொல்லவில்லை.
அயனாவரத்தில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணை சீரழித்தவர்கள், இன்னும் எப்படி வெளியே சுற்றிக் கொண்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்டோர் விபரத்தை, காவல் துறை வெளியிட வேண்டும்.
எனக்கு அரசு மீது எந்தவித கோபமும் கிடையாது. மனவளர்ச்சி குன்றிய மாணவியை சீரழித்தோரை என்கவுன்டர் செய்தாலும், அதை மக்கள் எதிர்க்கமாட்டார்கள்.
இவ்வாறு கஸ்துாரி கூறினார்.