தார்ச்சாலை மணல் மூட்டை பயன்படுத்தி அமைத்த அவலம்

எண்ணுார்:சமீபத்தில் வீசிய ‘பெஞ்சல்’ புயல் காரணமாக, கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அப்போது தாழங்குப்பம் கடற்கரை ஒட்டிய தார்ச்சாலை, ஒரு பக்கம் முழுதும் சேதமடைந்தது.

இதையடுத்து, நெடுஞ்சாலை துறை சார்பில் கடல் சீற்றத்தால் உருக்குலைந்த தார்ச்சாலை சீரமைக்கும் பணி நடந்தது.

இதற்காக, மணல் மூட்டை பயன்படுத்தி தார்ச்சாலையை தற்காலிகமாக சீரமைக்கும் முயற்சியில், ஊழியர்கள் ஈடுபட்டனர். பின், பிளாஸ்டிக் மணல் மூட்டையால் கடல் வளம் பாதிக்கும் என, கருத்து எழுந்தது.

இதையடுத்து, பிளாஸ்டிக்கு மாற்றாக சணல் சாக்கு மூட்டைகளில் மணலை நிரப்பி, அவற்றை தார்ச் சாலையின் அடிபாகத்தில் முட்டுக் கொடுத்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சாலையின் தரமும் கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, குறிப்பிட்ட துாரம் வரை, கான்கிரீட் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *