கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்த கணவன் கைது
படப்பை, டதாம்பரம் அருகே படப்பை அடுத்த மாடம்பாக்கம், தாய்மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கோபால்ராஜ், 33. பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி, 26. இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், பரமேஸ்வரியின் கழுத்தை நெரித்து கோபால்ராஜ் நேற்று கொலை செய்தார்.
தனது இரு குழந்தைகளையும், ஆவடி அருகே திருநின்றவூரில் உள்ள உறவினர் வீட்டில் ஒப்படைத்த பின், மணிமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மனைவி பரமேஸ்வரி சிலருடன் தகாத உறவில் இருந்ததால், கழுத்தை நெரித்து கொலை செய்ததாக, அவர் வாக்குமூலம் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார், பரமேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கோபால்ராஜை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.