பெருமாள் கோவிலில் பகவத் கீதை போட்டிகள்
சென்னை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின், ஹிந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில், ஸ்ரீமத் பகவத் கீதை ஜெயந்தி — 2024 விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி, தயான யோகம்,- 6வது அத்தியாயம் தொடர்பாக, மாணவ – மாணவயிருக்கு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த போட்டி சென்னை, தி.நகர் வெங்கடநாராயணா சாலையில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், டிச., 8 காலை 9:00 மணிக்கு துவங்குகிறது.
முதல் பிரிவில், 6, 7ம் வகுப்பை சேர்ந்தவர்களும், பிரிவு இரண்டில், 8, 9ம் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியரும் பங்கேற்கலாம். இதில், 18 அத்தியாயங்கள் கொண்ட போட்டியில் முதல் பிரிவில், 18வயதிற்கு உட்பட்டவர்களும், இரண்டாம் பிரிவில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் பங்கேற்கலாம்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று பேர் வீதம், அன்று மாலை பரிசுகள் வழங்கப்படுகின்றன. இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோரை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அழைத்துள்ளது.