மாணவர்கள் அட்டகாசம் பஸ் கண்ணாடி உடைப்பு
ஆவடி, ஆவடியில் இருந்து கீழ் கொண்டையார் பகுதிக்கு, தடம் எண்: 120இ மற்றும் 61இ பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், கீழ் கொண்டையாரில் இருந்து ஆவடிக்கு, நேற்று காலை 8:00 மணிக்கு 61இ பேருந்து, 60க்கும் மேற்பட்ட பயணியருடன் வந்தது. பேருந்தில் ஓட்டுனர் உமாபதி, 50, நடத்துனர் ஜனார்த்தனன், 35, ஆகியோர் பணியில் இருந்தனர்.
பேருந்து, காலை 9:30 மணியளவில் ஆவடி பேருந்து நிலையம் வந்தபோது, மாணவர்கள் சிலர் பேருந்தின் பின் பக்க கண்ணாடியை கல் வீசி உடைத்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து, ஆவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அதேபோல், கடந்த வாரம், தடம் எண்: 120இ வழித் தடத்தில், பள்ளி மாணவர்கள், பேருந்து படிக்கட்டில் நின்று, பாட்டு பாடி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். பயணியர் சிலர், அவர்களை பிடித்து ஆவடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.