மேலும் 17 பேர்! கழிவுநீ ர் கலந்த குடிநீரால் பாதிக்கப்பட்டோர்
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று 14 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதில் ஐந்து பேர், காமராஜர் நகரைச் சேர்ந்தவர்கள். இருவர், கன்டோன்மெட் மலைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வேறு பகுதகிளில் வசிப்பவர்கள். மழைக்காலத்தில் வாந்தி, பேதி போன்ற பாதிப்பு ஏற்படுவது பொதுவான விஷயம். பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் 30 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். இந்த எண்ணிக்கை நேற்று 15 ஆகக் குறைந்தது.
– பொற்செல்வன்,
நகர்நல அலுவலர், தாம்பரம் மாநகராட்சி.