மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சென்னை, டிச.8: அண்ணாசாலை கோட்ட அலுவலகம், எண்.6, லபாண்ட் தெரு, சிந்தாதிரிப்பேட்டை என்ற முகவரியிலும், அண்ணாநகர் கோட்டத்திற்கு பொறியாளர் அலுவலகம், எண்.1100, எச்- பிளாக், 5வது தெரு, 11வது பிரதான சாலை, அண்ணாநகர் என்ற முகவரியிலும், கிண்டி கோட்டத்திற்கு நங்கநல்லூர் துணை மின் நிலையம், 100 அடி ரோடு, இந்து காலனி, நங்கநல்லூர் என்ற முகவரியிலும், பொன்னேரி கோட்டத்திற்கு பொன்னேரி துணை மின் நிலையம், டி.எச்.ரோடு, வேண்பாக்கம், பொன்னேரி என்ற முகவரியிலும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், 10ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.