அப்போலோ மருத்துவமனையில் ஒருங்கிணைந்த கிளினிக் தொடக்கம்: நியூரோ-இ.என்.டி வெர்டிகோ, பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ்

சென்னை: அப்போலோ மருத்துவமனை ஒருங்கிணைந்த நியூரோ-இ.என்.டி வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் கிளினிக்கை தொடங்கியுள்ளது. மருத்துவ சேவையில் முன்னணியில் உள்ள அப்போலோ மருத்துவமனை, அப்போலோ ஒன் மையத்தில் அதன் ஒருங்கிணைந்த நியூரோ-இ.என்.டி வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதுமையான கிளினிக் நரம்பியல் நிபுணர்கள் மற்றும் இ.என்.டி (காது மூக்கு தொண்டை) நிபுணர்களின் ஆழ்ந்த நிபுணத்துவத்தை ஒருங்கிணைக்கிறது.

வெர்டிகோ, உடல் இயக்கத்தில் சமநிலையற்ற தன்மை (செயல்பாட்டு சமநிலை கோளாறு), விழுந்து விடுவோம் என்கிற அச்சம் போன்றவற்றைக் கொண்ட நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை வழங்கப்படும். மேலும், சென்னை அப்போலோ மருத்துவமனை வெர்டிகோ உச்சி மாநாடு 2024 இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இந்த உச்சிமாநாடு வெஸ்டிபுலர், ஒகுலர் மோட்டார் மற்றும் உடல் இயக்க சமநிலை கோளாறுகளின் சிகிச்சையில் அண்மைக்கால முன்னேற்றங்களைப் பற்றி விவாதிப்பதற்காக முன்னணி நிபுணர்களை ஒருங்கிணைக்கும் தளத்தை உருவாக்குகிறது.

இதுகுறித்து அப்போலோ மருத்துவமனைகள் குழும துணை தலைவர் ப்ரீத்தா ரெட்டி கூறியதாவது: இந்தியாவில் அதிகம் கவனிக்கப்படாத ஒரு முக்கியமான சுகாதார பிரச்னையை சமாளிப்பதற்கான ஒரு அத்தியாவசிய நடவடிக்கையாக ஒருங்கிணைந்த நியூரோ-இ.என்.டி வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. அப்போலோ ஒன் இம்முயற்சியை அறிமுகப்படுத்துவது மிக முக்கியமான முன்னெடுப்பாகும்.

ஏனெனில் இது தடுப்பு சுகாதார சோதனைகள் மூலம் முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகிறது. இதன் மூலம், ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை கடுமையாக பாதிக்கும் முன் இதன் நிலைமை குறித்து அடையாளம் காணவும் உதவுகிறது. எங்களது ஆழ்ந்த அறிவும், அனுபவமும் உள்ள மருத்துவர்களின் நிபுணத்துவத்துடன் அதிநவீன தொழில்நுட்பத்தை ஒன்றிணைப்பதன் மூலம், இச்சிகிச்சைகளில் உயரிய தரத்தை வழங்கவேண்டும் என்பதை இலக்காக கொண்டிருக்கிறோம்.

மேலும், நாடு முழுவதும் நோயாளிகளை மையமாகக் கொண்ட மேம்பட்ட, சுகாதார சேவையை அளிப்பதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். மேலும், இது தொடர்பான விழிப்புணர்வை ஊக்குவிக்க டிசம்பர் 9ம் தேதி ஒரு ‘சைக்ளத்தான்’ நடைபெறும். வானகரம் அப்போலோ மருத்துவமனையில் காலை 6.30 மணிக்கு தொடங்கும். இந்நிகழ்ச்சி மதியம் 1.30 மணிக்கு நிறைவடையும். சைக்ளத்தானை பாண்டிச்சேரி ஆளுநர் கைலாசநாதன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ஓய்வு பெற்ற காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபுவும் இதில் கலந்து கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *