அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு: சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி

சென்னை: வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெற கோரிதமுமுக சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமுமுக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலைமை வகித்தார். திமுக தலைமை நிலைய செயலாளர் (செய்திதுறை) ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் துணை தலைவர் ஆ.கோபன்னா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் வழ.மதிவதனி, தமுமுக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, மாநில அமைப்பு செயலாளர்கள் புழல் சேக் முஹம்மது அலி, புதுமடம் ஹலீம் உள்ளிட்ட தோழமை கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஜவாஹிருல்லா பேசுகையில், ‘வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991ஐ குப்பையில் வீசிவிட்டு, பாபர் மஸ்ஜித் பாணியில் பள்ளிவாசல்கள், மதரசாக்கள், அவற்றிற்கு உட்பட்ட சொத்துகள் ஆகியவற்றை முஸ்லிம்களிடமிருந்து பறிக்க, ஒன்றிய பாஜக அரசு வக்பு வாரிய திருத்த சட்டத்தை கொண்டுவர துடிக்கிறது,’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *