ரூ.40 லட்சத்தில் அமைத்த அலங்கார விளக்கு ‘ தாம்பரத்தில் மாநகரில் அவுட் ‘
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், மின் விளக்குகளை பராமரிக்கும் பணி, தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இதில், 44,498 மின் விளக்குகளை, 50 கோடி ரூபாய் செலவில், சமீபத்தில் எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்பட்டது.
இதில், ஜி.எஸ்.டி., சாலையில் பெரும்பாலான விளக்குகள் எரியவில்லை.
அதேபோல, பெருங்களத்துார் மேம்பாலத்தில், 80 சதவீத விளக்குகள் எரிவதில்லை. ஜி.எஸ்.டி., சாலை மீடியன் கம்பங்களில், 40 லட்சம் ரூபாய் செலவில், 6 அடி உயரத்திற்கு அலங்கார மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.
இந்த விளக்குகளில், தற்போது, 90 சதவீதம் எரியவில்லை. நான்கே மாதங்களில், அலங்கார விளக்குகள் எரியாமல் போன சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி செயற்பொறியாளர் ஞானவேலிடம் கேட்டபோது, ‘அது தொடர்பாக விசாரிக்கிறேன்’ என்றார்.