கோவில் நிலங்களை மீட்க கோரி கடிதம்
எம்.கே.பி.நகர்,
ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ள கோவில் நிலங்களை மீட்கக்கோரி, அனைத்து ஹிந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு அறக்கட்டளையின் 101 பேர் இணைந்து, ஹிந்து சமய அறநிலைய துறை கமிஷனருக்கு, எம்.கே.பி.நகர் தபால் நிலையத்தில் தனித்தனியாக கடிதம் அனுப்பினர்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
அனைத்து ஹிந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில், கடந்த மூன்று ஆண்டுகளாக கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில், பொன்னேரி, மேலுார் திருமணங்கீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 71 ஏக்கர் நிலம், தம்பு செட்டி தெரு, ஸ்ரீகாளிம்காம்பாள் கோவிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் 18 சென்ட் உள்ளிட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது, கள ஆய்வில் தெரிய வந்தது.
எனவே நிலங்களை மீட்டெடுத்து பொதுமக்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.