வியாசர்பாடி வீரருக்கு தங்கம் ‘ஆசிய குத்துச்சண்டை போட்டி
வியாசர்பாடி, சென்னை, வியாசர்பாடி, சர்மா நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 24; குத்துச்சண்டை வீரர்.
இவர், வியாசர்பாடி, சர்மா நகரில் உள்ள எம்.கே.பி.நகர் காவல் நிலைய ‘பாய்ஸ்’ கிளப்பில், குத்துச்சண்டை பயிற்சி பெற்று வருகிறார்.
தேசிய அளவிலான பல போட்டிகளில் பங்கேற்ற ராமகிருஷ்ணன், கடந்த 28, 29ம் தேதி வங்கதேசத்தில், உலக குத்துச்சண்டை கவுன்சில், ஆசிய அளவில் நடத்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றார்.
இறுதிப்போட்டியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட வங்கதேச வீரர் எம்.டி.சபியுல் இஸ்லாமை, 79- – 71, 76- – 70, 76 – -70 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி, தங்க பெல்ட்டை கைப்பற்றினார்.