குடியிருப்புகளில் புகுந்த 30 பாம்பு மீட்பு
சென்னை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பாம்புகள், குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகுந்து விடுகிறது. இதனால், பொது மக்கள் பாம்புகளை பிடிக்க, எங்கள் உதவியை நாடுகின்றனர்.
நேற்று முன்தினம் மட்டும், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, தனியார் வங்கி ஒன்றில் பதுங்கி இருந்த பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.
வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில், குடியிருப்பு ஒன்றில் புகுந்த, 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பும் மீட்கப்பட்டது.
ஒரே நாளில், 50 இடங்களில் இருந்து, எங்களுக்கு அழைப்பு வந்தது. எல்லா இடங்களுக்கும் சென்று, 30 பாம்புகளை பத்திரமாக மீட்டு, வனத்துறையிடம் ஒப்படைத்து உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.