சென்னை குடிநீர் தேவைக்காக ஆரணியாறு உபரிநீர் பூண்டிக்கு திருப்பம்
சென்னை: ஆரணியாறு உபரிநீர், சென்னை குடிநீர் தேவைக்காக கொசஸ்தலையாற்றில் அமைந்துள்ள பூண்டி நீர்த்தேக்கத்திற்கு திருப்பப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கண்டலேறு பூண்டி கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள கீழ்குமிழி ஆந்திர மாநிலம் கண்டலேறுவில் இருந்து பெறப்படும் நீரினை ஆரணி ஆற்றில் கலக்காமல் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அனுப்பும் வகையாக ஊத்துக்கோட்டை சிட்லப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆரணியாற்றில் உள்ள அணைக்கட்டுகளின் கால்வாய்களுக்கும், நிலத்தடி செறிவூட்டவும் வழங்கும் அளிக்கப்பட வேண்டிய வினாடிக்கு 2376 கன அடி வெள்ள நீருக்கு மிகையான உபரி நீரினை கண்டலேறு பூண்டி கால்வாய்க்கு திருப்பிவிடும் வகையில் வலது புறக்கரையில் நீரொழுங்கி அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 நீர்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 11.760 டிஎம்சியில் 6.950 டிஎம்சி மட்டுமே நீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில் ஆரணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரில் இருந்து, அதன் கீழ் உள்ள அணைக்கட்டுகளின் பாசனம் வழங்க கால்வாய்க்கு அளிக்கப்பட வேண்டியதுபோது மீதமுள்ள உபரி நீரின் ஒரு பகுதியாக வினாடிக்கு 200 கன அடி வரை கண்டலேறு – பூண்டி வழங்கு கால்வாய் மூலமாக கொசஸ்தலையாற்றில் அமைந்துள்ள பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சென்னை குடிநீர் பயன்பாட்டிற்கு தற்போது திருப்பி விடப்பட்டுள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.