5 மாடுகள் பலி
சிங்கபெருமாள் கோவில் அடுத்த கொண்டமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம், 60, என்பவரின் இரு பசு மாடுகள்; திருப்போரூர் ஒன்றியம், நாவலுாரில் ஒரு பசு, மின்சாரம் பாய்ந்து இறந்தன.
அதேபோல், ஊத்துக்கோட்டை அருகே, செஞ்சியகரம் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கு சொந்தமான இரு மாடுகள், மேய்ச்சலில் இருந்தன. பலத்த காற்றில் மின் கம்பிகள் அறுந்து, மாடுகள் மீது விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து அவை இறந்தன.