மணலி மண்டல ஏரிகள் தீவிர கண்காணிப்பில்
மணலி:மணலி மண்டலத்தில் கடப்பாக்கம் ஏரி, அரியலுார் ஏரி, சடையங்குப்பம் ஏரி, மணலி ஏரி உட்பட ஆறு ஏரிகள் உள்ளன. இதில், சடையங்குப்பம் ஏரி, நிரம்பும் தருவாயில் உள்ளது. மற்ற அனைத்து ஏரிகளும் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும், மணலி வழியாக எண்ணுார் நோக்கி செல்லும், புழல் மற்றும் கொசஸ்தலை உபரி கால்வாய்களிலும் மழைநீர் வரத்து அதிகம் உள்ளது.
இந்நிலையில், சென்னையின் குடிநீர் ஆதாரங்களான புழல் ஏரியில், 18.22 அடியும்; பூண்டி நீர்த்தேக்கத்தில், 23.30 அடிக்கும் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் ஏரிக்கு நீர்வரத்து இருப்பதாலும், தொடர் மழை காரணத்தாலும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால், உள்ளூர் ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், பின்னோக்கி ஊருக்குள் புகுந்து வெள்ள பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
மேலும், கரை உடைப்புகளும் ஏற்படலாம் என்ற அபாய நிலை உள்ளதால், அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்த வருகின்றனர்.