பெஞ்சல் புயல் முன்ெனச்சரிக்கை 39 காவல் மீட்பு குழுக்கள் தயார்; கூடுதல் கமிஷனர்கள் நேரில் ஆய்வு

சென்னை, நவ.30: வங்கக் கடலில் உருவாகி உள்ள பெஞ்சல் புயல் இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே காரையை கடக்கும் என்று கனிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து சென்னை பெருநகர காவல்துறையில் கமிஷனர் அருண் நேரடி மேற்பார்வையில் பயிற்சி பெற்ற 39 காவல் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் தலைமையில் உள்ள ஒவ்வொரு குழுவிலும் 12 காவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த காலங்களில் வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளை முன்கூட்டியே கணக்கெடுத்து அப்பகுதியில் மீட்பு பணிகள் மற்றும் பொதுமக்கள் தங்க வைக்க நிவாரண முகாம்கள் அமைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து சென்னை பெருநகர வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் நொளம்பூர், மாதாவரம், புளியாந்தோப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு காவல் கட்டுப்பட்டு அறைக்கு நேரில் சென்று அங்கு தயார் நிலையில் உள்ள மீட்பு குழுவினர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதேபோல், சென்னை பெருநகர வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் வேளச்சேரி, மடிப்பாக்கம், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் அமைக்கப்பட்டள்ள சிறப்பு காவல் கட்டுப்பட்டு அறை ஆய்வு செய்து மீட்பு பணிகள் குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது வெள்ளம் மீட்பு தொடர்பாக வரும் புகார்களின் படி உடனுக்குடன் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு தடையின்றி செல்லும் வகையில் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்க ேவண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *