‘டிவி ‘ நடிகையை ஏமாற்றிய காதலன் கைது
சென்னை:சென்னை சூளைமேட்டை சேர்ந்த 26 வயது பெண், ‘டிவி’ தொடர்களில் நடித்து வருகிறார். இவர், அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார் :
பல்வேறு ‘டிவி’ தொடர்களில் நடிக்கிறேன்.
சூளைமேட்டை சேர்ந்த சந்தோஷ் என்ற சாம், 27 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின் காதலாக மாறியது. திருமணம் செய்து கொள்வதாக கூறி, என்னிடம் சந்தோஷ் பல முறை அத்துமீறலில் ஈடுப்பட்டார்.
அதீத காதலால் அவர் கேட்கும் போதெல்லாம், பணம், நகை கொடுத்து உதவினேன். இதுவரை, ஆறு லட்சம் ரூபாயும், 2 சவரன் நகையும் பெற்றுள்ளார்.
சில நாட்களாக என்னிடம் பழகுவதை தவிர்த்தார். திருமணம் குறித்து கேட்டால், தட்டிக் கழித்தார்.
பணத்தையும், நகையையும் திரும்ப கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்தார். என்னை ஏமாற்றிய சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து, சந்தோஷை நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.