திருவொற்றியூர் பாக்சிங்’கில் முதலிடம்
திருவொற்றியூர்,புளியந்தோப்பு, டான் பாஸ்கோ பாலிடெக்னிக் கல்லுாரியில், மாநில குத்துச்சண்டை போட்டிகள், நவ, 23, 24 ஆகிய தேதிகளில் நடந்தன. தமிழ்நாடு முழுதுமிருந்து, 700க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் பங்கேற்றனர்.
சப் – ஜூனியர், ஜூனியர், யூத், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், திருவொற்றியூரைச் சேர்ந்த ஸ்கொயர் ஸ்போர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த, 38 வீரர் – வீராங்கனையர் பங்கேற்று விளையாடியதில், 19 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம் வென்றனர்.
அதன்படி, 76 புள்ளிகள் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினர். வெற்றி பெற்ற அணிக்கு, ஆளுயுரக் கோப்பை, சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டன.