திருவள்ளூர் டிவிசன் லீக் கிரிக்கெட் பைன் ஸ்டார் சி.ஏ., அணி வெற்றி
திருவள்ளூர் டிவிசன் கிரிக்கெட் லீக் போட்டியில், பைன் ஸ்டார் சி.ஏ., அணி, 84 ரன்கள் வித்தியாசத்தில், சேஷாத்ரி சி.சி., அணியை தோற்கடித்தது.
திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், திருவள்ளூர் டிவிசன் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடந்து வருகிறது.
இதில், திருவள்ளூர் மாவட்ட அளவில் உள்ள கிளப், அகடாமி உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. முதலாவது டிவிசன், ‘ஏ’ மண்டல பிரிவின் 50 ஓவருக்கான ஆட்டம், ஆவடி ஓ.சி.எப்., மைதானத்தில் நடந்தது.
முதலில் பேட்டிங் செய்த, பைன் ஸ்டார் அணி, 45 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 271 ரன்களை அடித்தது. அணியின் வீரர் விக்னேஷ், 97 பந்துகளில், ஆறு சிக்சர், ஆறு பவுண்டரி என, 103 ரன்களை அடித்தார்.
எதிரணி வீரர் சைலேந்தர் ஐந்து விக்கெட் எடுத்து, 57 ரன்களை கொடுத்தார்.
அடுத்து பேட்டிங் செய்த, சேஷாத்ரி சி.சி., அணி, 36.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 187 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது.
இதனால், 84 ரன்கள் வித்தியாசத்தில், பைன் ஸ்டார் அணி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்கிறது.