கத்தியுடன் திரிந்த திருடர்கள் ‘பாரில்’ கைது
வண்ணாரப்பேட்டை, சென்னை, வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே உள்ள மதுக்கூடத்தில், இரு வாலிபர்கள் கத்தியுடன் திரிவதாக, வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கத்தியுடன் திரிந்த இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் கொருக்குப்பேட்டை, பார்த்தசாரதி 4வது தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 22, ஆர்.கே.நகர், பாரதிநகர் ஹவுசிங் போர்டை சேர்ந்த வசந்த், 22, என்பதும் தெரிந்தது. இவர்கள் மீது, பல திருட்டு வழக்குகள் உள்ளன.
இவர்களிடம் இருந்து 1 அடி நீள கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.