சிகிச்சைக்கு வந்தவர் ஏர்போர்ட்டில் உயிரிழப்பு
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர், பிரகாஷ் குமார்,63, சிமென்ட் வியாபாரம் செய்து வந்தார்.
இரண்டு ஆண்டுகளாக தொண்டை புற்று நோய்க்கு, பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற திட்டமிட்டு இருந்தார்.
அதற்கான, தன் மகன் உத்தம் சிங்கி என்பவருடன் நேற்று அதிகாலை விமானத்தில் சென்னை வந்தார். விமானநிலையத்தில் இருந்து சக்கர நாற்காலியில் அவரை அழைத்து சென்ற போது, வாயில் இருந்து ரத்தம் கொட்டியது. திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக விமான நிலைய வளாகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, அதிகாரிகள் அழைத்து சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விமானநிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.