கூடுதல் பெட்டிகள் 2 ‘ ரயில்களில்
தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை மற்றும் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் இரண்டு விரைவு ரயில்களில், தலா ஆறு பெட்டிகளை கூடுதலாக தற்காலிகமாக இணைத்து இயக்க, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
l தாம்பரம் —- செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலில், 2ம் வகுப்பு ஒரு ‘ஏசி’ பெட்டி, 3ம் வகுப்பில் – 2, ‘ஏசி’ இல்லாத முன்பதிவு பெட்டிகள் — 2, பொதுப்பெட்டி – 1 என, ஆறு பெட்டிகள், வரும் 27 முதல் ஜன., 29 வரையில் இணைத்து இயக்கப்பட உள்ளன
l தாம்பரம் —— நாகர்கோவில் விரைவு ரயிலில், 2ம் வகுப்பு ஒரு ‘ஏசி’ பெட்டி, 3ம் வகுப்பில் -2, ‘ஏசி’ இல்லாத முன்பதிவு பெட்டிகள் — 2, பொதுப் பெட்டி -1 என, ஆறு பெட்டிகள், வரும் 27 முதல் ஜன., 29 வரை இணைத்து இயக்கப்பட உள்ளன.
இந்த பெட்டிகள் சேர்ப்பு தற்காலிகமாக நடைமுறையில் இருக்கும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.