தி.மு.க. , – த.வெ.க. , வாக்குவாதம்
சென்னை:வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமில், மேஜை அமைப்பதில் தி.மு.க., மற்றும் விஜய் கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மாநிலத்தில், வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் தொடர்பாக இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது.
சென்னை, அயோத்திக்குப்பம் பகுதியில், நேற்று சிறப்பு முகாம் நடந்தது. இந்த இடத்தில் கட்சிக் கொடியுடன் மேஜை அமைப்பதில், தி.மு.க., மற்றும் நடிகர் விஜயின் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தினருக்கும், திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கு, இரு கட்சிகளைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் இருந்தனர். இதனால், மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. மெரினா போலீசார் விரைந்து சென்று, இரு தரப்பிடம் சமாதானம் பேசி அனுப்பினர். இச்சம்பவத்தால், அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.