மத்திய பாஜக அரசுக்கு திமுக ஆதரவு அளிக்கும் நிலை உருவாகலாம்: சீமான் கருத்து

புதுக்கோட்டை: மத்திய பாஜக அரசுக்கு திமுக ஆதரவு அளிக்கும் நிலை உருவாகலாம்என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அம்பேத்கர், பெரியாரை போற்றுவதைப்போல, திருவிக,மறைமலை அடிகள், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், முத்துராமலிங்கத் தேவர், வேலு நாச்சியார், அழகுமுத்துக்கோன் போன்றவர்களையும் நடிகர் விஜய் போற்ற வேண்டும். அவருடன் கூட்டணி அமைப்பீர்களா என்று என்னை கேட்பதைவிட, சீமானுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று அவரிடம் கேளுங்கள்.
என்னைப் பொறுத்தவரை தேசியம், திராவிடம் பேசுவோருடன் கூட்டணி கிடையாது. எனதுகொள்கைக்கு உடன்பட்டு, கூட்டணி அமைப்பதை விஜய்தான் தீர்மானிக்க வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனித்துதான் போட்டியிடுவேன். நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும்ஆதரவை விலக்கிக் கொண்டால், மத்திய பாஜக அரசுக்கு திமுக ஆதரவளிக்கும் நிலை உருவாகும்.
நான் சர்வாதிகாரியாக செயல்படுவதாக கட்சி நிர்வாகிகள் சிலர்குற்றம் சாட்டியது குறித்து கேட்கிறீர்கள். மரத்தில் இருந்து காய்ந்துவிழும் இலைகள் ‘சலசல’ என்ற சப்தத்துடன்தான் கீழேவிழும். காய்ந்த இலைகள் உதிர்ந்தால்தான், புதியஇலைகள் துளிர்க்கும். இவ்வாறு சீமான் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *