காமெடி கதையுடன் உருவான சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்
காமெடி கதையுடன் உருவான சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, சுனில் ரெட்டி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’. பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ளார்.
இரட்டை இயக்குநர்களான விக்ரம் ராஜேஷ்வர், அருண் கேசவ் இயக்கியுள்ளனர். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். இதன் டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
படம்பற்றி இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வர் கூறும்போது, “இது முழு காமெடி படம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை சிரிக்கலாம். குடும்பத்துடன் ரசிப்பது போல இருக்கும். வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கச் செல்லும் ஒரு கோஷ்டி செய்யும் ரகளைதான் கதை. கோகுலம் ஸ்டூடியோவில், பல லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்ட சுரங்கம் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம்.
அந்தக் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. பெரிய ஆக்ஷன் படம் போன்ற எண்ணத்தை தலைப்பு கொடுத்தாலும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறோம். இசை அமைப்பாளர் டி.இமான், வித்தியாசமான இசையைக் கொடுத்திருக்கிறார்” என்றார்.