காவிரியில் விநாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்துக்கு திறப்பு
பெங்களூரு: கடந்த 11-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழகத்துக்கு விநாடிக்கு 11, 500 கன அடி நீரை திறக்க பரிந்துரைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, விநாடிக்கு 8,000 கன அடி நீரை திறப்பதாக தெரிவித்தது. இந்நிலையில், கனமழை காரணமாக காவிரி, கபிலா ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று மாலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 108.70 அடியாக உயர்ந்துள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 19.35 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.