உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. 10 உண்டியல்கள், ஒரு கால் நடை மற்றும் அன்னதான உண்டியல்கள் திறக்கப்பட்டன. அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ. 26 லட்சத்து 57 ஆயிரத்து 10 கிடைத்தது. மேலும் தங்கம் 99.500 கிராம், வௌ்ளி 168 கிராம் கிடைத்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சாத்தூர், மதுரை, துலுக்கப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் ஐயப்ப சேவா சங்கம், கோவில் ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். இந்து அறநிலைய துறை விருதுநகர் கோவில்களின் உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன் ஆகியோரின் தலைமையில் பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி மற்றும் அறங்காவலர் குழுவினர், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் இந்த பணிகளை பார்வையிட்டனர்.