பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய் உரைகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என வைகோ விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய் உரைகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என வைகோ விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கட்டாயமாக அமல்படுத்துவோம் என்று மோடியும் அமித்ஷாவும் பேசி வருவது முஸ்லிம்களுக்கு எதிரானது தானே? நாடாளுமன்றத் தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிற போது பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு 2015ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையை இப்போது வெளியிட்டு இந்தியாவில் இந்துக்களின் மக்கள் தொகை 84 சதவீதத்திலிருந்து 78 சதவீதமாக குறைந்துவிட்டது.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மிகக் கடுமையாக இஸ்லாமிய வெறுப்பை கக்கிவிட்டு, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அலை பெருகி கொண்டிருப்பதனால், தொலைக்காட்சி நேர்காணலில் பிரதமர் மோடி தான் பேசியவற்றை மூடி மறைக்கப் பார்க்கிறார்.

“இந்து – முஸ்லிம் அரசியல் பேசத் தொடங்கினால் அந்த நாள் முதல், நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடுவேன்” என்று பிரதமர் மோடி கூறி இருப்பதன் நோக்கத்தை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். பிரதமர் அள்ளி வீசி வரும் அவதூறுகளையும் பொய் உரைகளையும் புறக்கணித்து இந்திய நாட்டு மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பதிலடியை கொடுப்பார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அநீதியானது
வைகோ நேற்று வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கை:
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இந்திய அரசின் உள்துறை அண்மையில் அறிவித்துள்ளது. தமது தவறான செயலுக்கு நியாயம் கற்பிக்கிறது மோடி அரசு. இலங்கை தமிழ் மக்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு, இனப்படுகொலை செய்த அநீதியை எதிர்த்து அறவழியிலும், அமைதி வழியிலும் போராடிய விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழ மக்களின் பாதுகாப்பு அரணாகவே செயல்பட்டு வந்தது, வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *