சவாலான கட்டத்தில் சந்திரயான்-3; இஸ்ரோ தீவிர கண்காணிப்பு

6-வது கட்டத்தில் இருந்துதான் சந்திரயான்-3 விண்கலத்துக்கு அக்னி பரீட்சை ஆரம்பிக்க இருக்கிறது. இனி கடக்க இருக்கும் ஒவ்வொரு கட்டமும் சவாலானது.

சாப்பிட மறுத்து அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, நிலவை காட்டி உணவு ஊட்டுவது தாய்மார்களின் காலாகாலத்து பழக்கம். பிஞ்சு மனதை அப்படி என்னதான் வசியம் செய்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை, நிலவை பார்த்ததும் மதிமயங்கும் குழந்தைகளும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுகின்றனர். பூமியின் துணைக்கோள் நிலவு என்பதாலோ என்னவோ, ஏதோ ஒரு ஈர்ப்பு இரண்டுக்கும் இடையே இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ கோள்கள் வலம் வந்து கொண்டிருந்தாலும், நிலவு என்று நாம் அழைக்கும் சந்திரன் மீதான ஆராய்ச்சிகள் 1950-ம் ஆண்டுகளிலேயே தொடங்கப்பட்டுவிட்டன. ஆரம்பத்தில் அமெரிக்கா, ரஷியா இடையேதான் கடும் போட்டி நிலவியது. இரு நாடுகளும், சந்திரனின் வடதுருவத்தை ஆராய விண்கலங்களை அனுப்பியது. இதில், முதலில் வெற்றி பெற்றது ரஷியாதான் என்றாலும், 1969-ம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய அமெரிக்கா, உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பியது.
தென் துருவத்தில் ஆய்வு நிலவு குறித்த ஆய்வில், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் முன்னிலையில் இருந்து வருகிறது. 2008-ம் ஆண்டு சந்திரயான்-1, 2019-ம் ஆண்டு சந்திரயான்-2 ஆகிய விண்கலங்களை நிலவு ஆராய்ச்சிக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ அனுப்பியது. இதுவரை எல்லா நாடுகளும் நிலவின் வடதுருவ பகுதியில்தான் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றன. தென்துருவத்தை ஆராயும் பணியை யாரும் தொடங்காத நேரத்தில், இந்தியா சந்திரயான்-2-ஐ நிலவின் தென்துருவ பகுதிக்கு அனுப்பியது. ஆனால், நிலவில் குறிப்பிட்ட பகுதியில் தரையிறங்கியபோது, லேண்டர் கருவி வேகமாக மோதி உடைந்தது. அதே நேரத்தில், விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு, தற்போதும் அது செயல்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.

சந்திரயான்-3

இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் 4 ஆண்டு கால இடைவிடாத முயற்சியின் பயனாய், மீண்டு எழுந்து மீண்டும் சந்திரயான்-3 என்ற விண்கலத்தை உருவாக்கி, கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி நிலவின் தென்துருவ பகுதிக்கு அந்த விண்கலம் பயணத்தை தொடங்கி இருக்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எல்.வி.எம்.-3 ராக்கெட் மூலம் மதியம் 2.35 மணிக்கு சீறிக்கொண்டு புறப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் பயண திட்டம் 10 கட்டங்களாக வகுக்கப்பட்டிருந்தது.

பல்வேறு கட்டங்கள் முதற்கட்டமாக, பூமியின் தரைப்பகுதியில் இருந்து 170 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், உந்தப்பட்டு பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கியது. பூமிக்கு அருகே 170 கி.மீ. தூரத்திலும், தொலைவில் 36 ஆயிரத்து 500 கி.மீ. தூரத்திலும் நீள்வட்டப்பாதையில் சுற்றி வந்தது. இவ்வாறு விண்கலத்தை சுற்ற வைக்கப்பட்டது 2-வது கட்டம். பூமியை சந்திரயான்-3 விண்கலம் சுற்றிக்கொண்டிருந்த நிலையில், அதை வெகுதூரத்தில் உள்ள நிலவு நோக்கி நகர்த்திக் கொண்டு செல்வதுதான் 3-வது கட்டம். கடந்த 1-ந்தேதி தொடங்கிய 3-வது கட்ட பணிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. சம ஈர்ப்பு விசைப்புள்ளி பூமியின் ஈர்ப்பு விசையும், நிலவின் ஈர்ப்பு விசையும், சரிசமமாக இருக்கும் சம ஈர்ப்பு விசைப்புள்ளி, நிலவில் இருந்து சுமார் 62 ஆயிரத்து 630 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அந்த புள்ளிக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *