காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

தியாகிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் உள்ள தியாகிகள் மணிமண்டபம் முகப்பில் அமைந்துள்ள தியாகிகள் செண்பகராமன், ஆர்யா என்கிற பாஷ்யம், சங்கரலிங்கனார் ஆகியோர் உருவ சிலைகளுக்கு அருகில் அவர்களின் உருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தியாகிகளின் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ் வளர்ச்சித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *