போதையில் வாகனங்கள் உடைப்பு – வாலிபர் கைது
போரூர்:
சென்னை கே.கே நகர் 15-வது செக்டாரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 டிராவல்ஸ் கார் மற்றும் ஒரு டெம்போ டிராவலர் என 5 வாகனங்கள் அடுத்தடுத்து அடித்து நொறுக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த வடபழனி போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அதே பகுதி ஒட்டகபாளையத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்கிற தனுஷ் (வயது 21) மற்றும் அவரது கூட்டாளிகளான சந்துரு, ஸ்டீபன் ஆகியோருடன் கஞ்சா போதையில் கார்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
அவர்களை பிடிக்க தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று இரவு போலீசார் தனுசை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.