வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது

வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.84 குறைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.84.50 விலை குறைந்து ரூ.1937 ஆக ஆக விற்பனை செய்யப்படுகிறது. விட்டு உய்பயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 14 கிலோட் எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.1118.50 ஆகவே நீடிக்கிறது. கடந்த மாதமும் வணிக பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்து இருந்தது. கடந்த மாதம் ரூ.171 குறைக்கப்பட்டது. நடப்பு மாதத்தில் ரூ.84 குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதால் ஹோட்டல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *