சென்னையில் அண்ணா சாலை, காமராஜர் சாலை, எழும்பூர்,உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் , ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த் நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. சென்னை அண்ணா சாலை, காமராஜர் சாலை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.