இரட்டை அகலப்பாதை பணி: தென் மாவட்ட ரெயில்கள் இன்று முதல் மதுரை வழியாக இயக்கம்
தென் மாவட்ட ரெயில்கள் இன்று முதல் மதுரை வழியாக இயக்கப்படுகின்றன.
மதுரை, மதுரை-திருமங்கலம் இடையோன இரட்டை அகலப்பாதை தண்டவாள இணைப்பு பணிகள் நடந்து வந்தன. இதற்காக மதுரை வழியாக செல்லும் மற்றும் மதுரையில் இருந்து புறப்படும் தென் மாவட்ட ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சில ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தன. சுமார் ஒரு மாதம் நடந்து வந்த இந்த பணிகளால் தென் மாவட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். இந்தநிலையில், தண்டவாளங்கள் இணைப்பு பணிகள் நேற்றுடன் முடிவடைந்தன. இதையடுத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தென் மாவட்ட ரெயில்கள், ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் அனைத்தும் வழக்கம் போல மதுரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன.