நகரங்களின் தூய்மைக்கான விழிப்புணர்வு போட்டி
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு:
இந்தப் பாடல்களில் பரிசு பெறும் பாடல்களை நகராட்சி அதிகாரிகள், மற்றும் திரைப்பட இசையமைப்பாளர் தீனா ஆகியோர் இணைந்து பம்மலை சேர்ந்த நாகார்ஜூன் என்பவருக்கு முதல் பரிசு ₹ 20 ஆயிரமும், பொன்னேரியை சேர்ந்த பொக்கிஷா என்பவருக்கு 2-வது பரிசு ₹10 ஆயிரமும், செங்கல்பட்டை சேர்ந்த ஜனா என்பவருக்கு 3-வது பரிசு ₹5 ஆயிரம் மற்றும் போரூரை சேர்ந்த கவுதம்ராஜ் என்பவர் உள்பட 17பேருக்கு ஆயிரம் ரூபாய் ஆறுதல் பரிசுக்கு தேர்ந்தெடுத்தனர். மேலும், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடந்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் 71 மாணவ – மாணவிகள் வெற்றி பெற்றனர். இதன் பரிசளிப்பு விழா திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
நகரமன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமை தாங்கி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார், நடிகை அஞ்சு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் ரமேஷ், பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.