மக்களால் அரசு, அரசால் மக்கள் இல்லை. மக்கள்தான் அரசை தேர்ந்தெடுக்கின்றனர். அரசு மக்களை உருவாக்குவதில்லை. மன்னன் தான் காணாமல் போயிருக்கிறார்களே தவிர மக்கள் காணாமல் போனதில்லை. அரசும், அரசு இயந்திரமும் மக்களுக்காவே இயங்க வேண்டும். அரசனும், மந்திரியும்,அரசு ஊழியர்களும் தன் சொந்த குடும்பத்தின் நலனை விட பொதுமக்களின் நலனையை பெரிதாக கருத வேண்டும் என்று 2000 வருடங்களுக்கு முன்பே சாணக்கியர் உதித்த பொன்மொழிகள். அதெல்லாம் இப்ப சொன்ன சிரிப்பாங்க…
மதிப்பிற்குரிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மக்களின் நம்பிக்கையை பெற கடந்த சட்டமன்ற தேர்தல் வரை நடத்திய போரட்டங்கள் சர்வசாதரணமானது அல்ல. முதலில் தனது கடசியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காகவே கடுமையாக உழைத்துள்ளார். அதன் பிறகு ஜெயலலிதாவின் ஆளுமைய எதிர்த்து போராடி அவர் இறந்த பிறகு எடப்பாடியின் தவறுகளையும், ஊழல்களையும், வீதிவீதியாய் நடந்து சென்று மக்களிடம் எடுத்துரைத்து நம்பிக்கையை பெறுவதற்கு கடுமையாக போராடிதான் பெற்றுள்ளார்.அதிமுக கட்சியில் இவ்வளவு குழப்பம் நிறைந்த சூழலிலும் வெறும் 1 அல்லது 2 சதவீதம் அளவில்தான் வெற்றி பெற்றுள்ளீர்கள்.
பெரும்பாலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர்கள் தங்கள் ஆட்சியாகவே கருதுவார்கள்.அதில் ஒன்றும் தவறில்லை. ஏனனென்றால் அதிமுக அரசு எஸ்மா,டெஸ்மா என்று சட்டம் கொண்டு பல லட்சம் அரசு ஊழியர்களை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பியது. அந்த கையெழுத்தை தங்களது ஆட்சியில் ஒன்றுமில்லாமல் ஆக்கி அந்த அரசு ஊழியர்களுக்கு திரும்பவும் வாழ்வு கொடுத்தது திமுக தான். அதனால் அரசு ஊழியர்கள் தங்கள் ஆட்சி என்று சொல்வதில் தவறில்லை. அவர்களின் விஸ்வாசம் மக்களுக்கு சேவை செய்வதில் இருந்தால் மகிழ்ச்சியே.ஆனால் அரசு உழியர்கள் பெரும்பான்மையோர் உண்மையில் மக்களுக்கு உழைக்கும் ஊழியர்களாக இருக்கின்றனர். ஆனால் அதில் கொஞ்சம் சில பேர் தங்களை மக்களின் ஊழியர்கள் என்பதை மறந்து அதிகாரம் பெற்ற அதிகாரிகள் என்று நினைத்து மக்களை ஆடு மாடுகளை விட கேவலமாக நடத்தி அலைக்கழிப்பு செய்து, லஞ்சத்தை, போய்தொலைகிறது என்று கொடுக்க வைத்து விடுகின்றனர்.இந்த லஞ்சப்பெருச்சாளிகளின் அட்டகாசத்தை நாம் நல்லவர்கள் என்று சொல்லும் மற்ற ஊழியர்கள் வேடிக்கைதான் பார்க்கின்றனர்.அயோக்கியனின் சத்தத்தை விட நல்லவனின் மௌனம் ஆபத்தானது.
முந்தியெல்லாம் அந்த ஆபிசரு ரொம்ப நல்லவரு அவரு இலஞ்சம் வாங்கமாட்டாரு, நேர்மையானவருன்னு சொல்லுவாங்க. இல்லைன்னா அவரு ரொம்ப கெட்டவர் லஞ்சம் வாங்குவாருன்னு சொல்லுவாங்க, ஆனால் தற்போது அந்த ஆபிசரு ரொம்ப நல்லவரு இலஞ்சம் வாங்குனா சரியா செஞ்சு கொடுத்திடுவாரு, அவரு ரொம்ப கெட்டவரு வாங்குனாலும் செஞ்சு கொடுக்காமல் ஏமாத்திடுவாரு, இதுதான் தற்போதைய நிலை. இப்ப ஓருத்தன் இலஞ்சம் வாங்காமல் வேலை பார்த்தார் என்றால் அவருக்கு பிழைக்கத் தெரியாதவர் என்று பெயர். அவர் உயிருக்கும் எப்போதும் வேண்டுமானலும் ஆபத்து வரலாம் அதுதான் தற்போதைய சூழ்நிலை.இந்த தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டம்தான் தேனி மாவட்டம். இந்த தேனி மாவட்டம் இயற்ககை அன்னையின் சொந்த மாவட்டமேன்னு சொல்லலாம்.அவ்வளவு இயற்ககையின் அழகு கொட்டிக்கிடக்கிறது. இந்த மாவட்டம் விவாசயமும், விவசாயம் சார்ந்த தொழில்கள் நிறைந்ததுதான். இங்கே தொழிற்சாலைகள் குறைவுதான். இங்கே படித்திருந்தாலும் விவாசயத்தில் பெரும்பாலும் மக்கள் பணியாற்றுகின்றனர். அந்த விவசாயிகள் மூல ஆதாரம் அவர்களுடைய நிலங்கள் தான். அவர்களின் உரிமையை நிலைநாட்டுவது அவர்கள் வருவாய்துறையிடமிருந்து பெறும் பட்டா சிடடாவும்தான். அந்த பட்டா சிட்டாவை வழங்கும் வருவாய்துறையின் அழைக்கழிப்பு, காலதாமதம், இலஞ்சமும் கொஞ்சம் எல்லை மீறி போய்கொண்டுருக்கிறது.
அதற்கு காரணம் கிராம நிர்வாக அதிகாரி தவறு செய்கிறார் என்றால் அவர் மேல் நடவடிக்கை எடுக்க முடியாத சூழலில் வட்டாட்சியர் உள்ளார். வட்டாட்சியர் தவறு செய்கிறார் என்றால் அவர் மேல் நடவடிக்கை எடுக்க முடியாத சூழலில் வருவாய் கோட்டாட்சியர் உள்ளார். வருவாய் கோட்டாட்சியர் தவறு செய்தால் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க முடியாத சூழலில் உள்ளார்.ஆனால் தற்போது கிராம நிhவாக அதிகாரி தவறு செய்தால் ஆட்சியர் கூட நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில்தான் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். அதற்கான காரணங்களை பின்னர் விரிவாக அடுத்தடுத்த தொடர்களில் எழுதுவோம்.
இங்கே வருவாய்துறை ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் வரை எல்லாம் மிகச்சிறப்பான அறிவுடன் தெளிவாக இருக்கிறார்கள். மக்களாகிய நாம்தான் அறியாமையில் இருக்கிறோம். நாம்தான் அறியாமையிலிருந்து மீள வேண்டும்.அதற்கான முயற்சியாக வருவாய்தறையின் அழைக்கழிப்பு, காலதாமதம், இலஞ்சத்தை எதிர்த்து தொடங்கும் சிறிய முயற்சிதான் இந்த அறப்போராய் குரல்… இது அறியாமையில் இருக்கும் மக்களை மீட்கும் முயற்சி…
முயற்சி 1…. தொடரும்…
ஆசிரியர் ப.முருகன்.
செல்- 86376 88437