விக்ரம் படத்தை பாராட்டிய கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல்..!

விக்ரம் திரைப்படம் குறித்து இயக்குனர் பிரசாந்த் நீல் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்துள்ளது. உலக அளவில் விக்ரம் திரைப்படத்தை பாராட்டி திரைப்பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கேஜிஎஃப் திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் ‘விக்ரம்’ திரைப்படம் குறித்தும் படக்குழு குறித்தும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘விக்ரம் படக் குழுவினருக்கும் வாழ்த்துகள்.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரை ஒன்றாக காண்பது கண்களுக்கு விருந்தாக உள்ளது. லோகேஷ் கனகராஜ், எப்பொழுதும் உங்களுடைய படங்களுக்கு நான் ரசிகன். அனிருத், நீங்கள் ஒரு ராக் ஸ்டார். சண்டைப் பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவை நினைத்து பெருமையாக இருக்கிறது. நீங்கள் இருவரும் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

https://twitter.com/prashanth_neel/status/1546423023787732994?s=20&t=NQC5ApSMLxDAZz_Y_m3J5A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *