ரூ.20 கோடியில் மயான பூமிகளை மேம்படுத்த திட்டம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 26 மயான பூமிகள், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. அதன் அடிப்படையில் 26 மயான பூமிகளில் ஏற்கனவே இருக்கும் மரக்கழிவு வாயு மூலம் உடல்களை எரியூட்டும் முறை மாற்றப்படுகிறது. புதிதாக திரவ பெட்ரோல் எரிவாயு அதாவது எல்.பி.ஜி. வாயு மூலம் உடல்களை எரியூட்டும் பணி செயல்படுத்தப்பட உள்ளது.

அந்த வகையில் வடசென்னை பகுதியில் உள்ள எண்ணூர், திருவொற்றியூர்-குப்பம், மணலி, மாதவரம், புழல், விநாயகபுரம், சீதாராம் நகர், முல்லை நகர் ஆகிய 8 மயான பூமிகள். மத்திய சென்னை பகுதியில் உள்ள திரு.வி.க. நகர், மேல்பட்டிப்பொன்னப்பன் தெரு, ஜி.கே.எம். காலனி, அம்பத்தூர், அண்ணா நகர், வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய 7 மயான பூமிகள். அதேபோல் தென்சென்னை பகுதியில் உள்ள வளசரவாக்கம், நொளம்பூர், ஆதம்பாக்கம், குன்றுமேடு, கானகம், கிண்டி சிட்கோ, பெருங்குடி, புழுதிவாக்கம் ராமலிங்கம் நகர், ஈஞ்சம்பாக்கம், கண்ணகி நகர், சத்தியவாணி முத்து தெரு ஆகிய 11 மயான பூமிகள் என 26 இடங்களில் உள்ள மயான பூமிகளை புதுப்பித்து மேம்படுத்தும் பணிகள் நடைபெற இருக்கிறது.

ஏற்கனவே 14 மயான பூமிகளில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் மீதம் உள்ள 12 இடங்களிலும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *