அறிவியல் ஆயிரம்
ஓசோனுக்கு ஆபத்து
விண்வெளிக்கு விஞ்ஞானிகள் தவிர, மக்களையும் அழைத்துச்செல்லும் விதமாக விண்வெளி சுற்றுலா திட்டங்களை விர்ஜின் கேலஸ்டிக்ஸ், ஸ்பேஸ்எக்ஸ், புளூ ஆர்ஜின் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.இது போன்ற திட்டங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதிகளவிலான ராக்கெட்டுகளை ஏவும் போது அதிலிருந்து வெளிப்படும் கார்பன் போன்றவற்றால் வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் மீண்டும் பாதிக்கப்பட்டு, பூமியின் மீது விழும் புற ஊதாக்கதிர்களின் அளவு அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சிறுகோள் தினம்
சூரியனை சுற்றிவரும் பூமி, செவ்வாய் போன்ற கோள்களைப்போல ‘அஸ்ட்ராய்டு’ என அழைக்கப்படும் ஆயிரக்கணக்கான சிறுகோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. இவை கோள்களை விட மிகச்சிறியது. 1908 ஜூன் 30ல் ரஷ்யாவின் துங்குஸ்கா பகுதியில் சிறுகோள் விழுந்து வெடிப்பு ஏற்பட்டது. 2150 சதுர கி.மீ., சுற்றளவு பரப்பளவில் இருந்த 8 கோடி மரங்கள் தரைமட்டமாகின. இந்நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக ஜூன் 30ல் உலக சிறுகோள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சிறுகோள்களில் இருந்து பூமியை பாதுகாப்பதே இத்தினத்தின் நோக்கம்