2 கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் – 3 மாணவர்கள் கைது
சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் நந்தனம் அரசு கலைக்கல்லூரி மாணவர்களும், ராயப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களும் நேற்று திடீரென்று மோதிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக வணிக வளாக நிர்வாகம் சார்பில் அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் நந்தனம் அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.