உலக தற்கொலை தடுப்பு தினம்
அதன் ஒருபகுதியாக 50 தண்டனை சிறைவாசிகளுக்கு ‘தற்கொலை தடுப்பில் வாயிற் காப்போன்’ எனும் பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிலரங்க துவக்கவிழாவில் சிறை கண்காணிப்பாளர் நிகிலநாகேந்தரன் வரவேற்புரையாற்றினார். புழல் மத்திய மன இயல் நிபுணர் பாஸ்கரன் அறிமுக உரையாற்றினார். பயிலரங்க பயிற்றுனர் சென்னை பல்கலைக்கழக ஆற்றுப்படுத்தல் உளவியல் துறை பேராசியர் தேன்மொழி தற்கொலைத்தடுப்பில் வாயிற்காப்போனாக செயல்படுவோருக்கு தேவையான அடிப்படை திறன்கள் குறித்து பயிற்சி வழங்கினார்.
இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கிய சிறைத்துறை துணைத்தலைவர் கனகராஜ், ‘இந்த ஆண்டு தற்கொலைத்தடுப்பு நடவடிக்கை மூலம் நம்பிக்கை உருவாகியுள்ளது என்று தெரிவித்தார். மேலும் சிறைவாசிகளுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையின் முக்கியத்துவம் குறிந்து எடுத்துரைத்தார்.
சிறை அலுவலர் இளங்கோ நன்றி கூறினார். மத்திய சிறை மன நல ஆலோசகர்கள் மவுலீஸ்வரன், திலீப்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.