கடற்கரையில் நடந்து சென்ற வாலிபருக்கு கத்திக்குத்து – ஒருவர் கைது
சென்னை திருவல்லிக்கேணி கெனால் தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 26). இவர், நேற்று முன்தினம் இரவு மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நேதாஜி சிலைக்கு பின்புறம் நின்று கொண்டிருந்த 2 பேர், சசிகுமாரை வழிமறித்து தகராறு செய்தனர். தகராறு முற்றிய நிலையில் 2 பேரில் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சசிகுமாரை குத்தினார். உடனே இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். காயமடைந்த சசிகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இது தொடர்பாக பெசன்ட்நகர் ஓடைக்குப்பத்தை சேர்ந்த செய்யது முகமது பாஷா (26) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கத்தி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது ஏற்கனவே சாஸ்திரிநகர் போலீசில் அடிதடி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.