ரூ.20 கோடியில் மழைநீர் கால்வாய் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
பெருநகர சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் 11-வது மண்டலத்துக்கு உட்பட்ட ராமாபுரத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இந்த பணியை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
இதில் மதுரவாயல் எம்.எல்.ஏ. கணபதி, மண்டலக்குழு தலைவர் நொளம்பூர் ராஜன், மாநகராட்சி கவுன்சிலர் செல்வக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.