கண்டக்டரிடம் பணப்பையை சுருட்டி சென்ற மர்மநபர்

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து சிதம்பரம் செல்வதற்காக நள்ளிரவு 12.15மணிக்கு பயணிகளுடன் பஸ் புறப்பட்டது. கண்டக்டர் கலியபெருமாள் பஸ்ஸில் இருந்த பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார் அப்போது பயணி ஒருவருக்கு சில்லறை கொடுப்பதற்காக பார்த்தபோது கைப்பை மாயமாகி இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

தொடர் விடுமுறை காரணமாக பஸ்ஸில் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதை பயன்படுத்திய மர்ம நபர்கள் கண்டக்டர் கலியபெருமாளின் கைப்பையை பறித்து தப்பியது தெரியவந்தது. அதில் ரூ.13 ஆயிரம் ரொக்கம் மற்றும் பயண சீட்டுகள் இருந்தன.

இதுகுறித்து கலியபெருமாள் பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார். பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வடிவேல் சினிமா பட பாணியில் பஸ் கண்டக்டரிடம் பணப்பையை கைவரிசை காட்டி சுருட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *