திருவள்ளூர் டிவிஷன் கிரிக்கெட் மாஸ் சி.சி., அணி ‘சாம்பியன்’
திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள், ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் நடந்து வருகிறது.
இதில், இரண்டாவது டிவிஷன் ஆட்டத்தில், மொத்தம் எட்டு அணிகள், இரு குழுவாக பிரித்து ‘லீக்’ மற்றும் ‘பிளே ஆப்’ முறையில் மோதின.
இரு குழுவிலும் முதல் இடங்களை பிடித்த, எபினேசர் மார்கஸ் மற்றும் மாஸ் சி.சி., அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில், முதலில் பேட் செய்த எபினேசர் மார்கஸ் அணி, 25.3 ஓவர்களில் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அடுத்து பேட் செய்த, மாஸ் சி.சி., அணி, 22.3 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 91 ரன்களை அடித்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.
அதேபோல், ஆட்டோலெக் மற்றும் பட்டாபிராம் சி.ஏ., ஆகிய இரு அணிகளும், மூன்றாம் டிவிஷனுக்கு தரமிறக்கப்பட்டன.
ஒட்டுமொத்த இரண்டாவது டிவிஷன் தொடரில் அசத்திய கிளாசிக் சி.சி., அணி வீரர் கபில், 243 ரன்கள் அடித்தார். பந்துவீச்சில் மாஸ் சி.சி., வீரர் சரண், 13 விக்கெட்களை சாய்த்து முன்னிலை பெற்றார்.