சப் – ஜூனியர் ஹாக்கி வீரர்களுக்கு அழைப்பு
மாநில ஹாக்கி போட்டியில் பங்கேற்கும், சப் – ஜூனியர் அணிக்கான தேர்வு இன்று காலை நடக்கிறது.
மாநில அளவிலான சப் – ஜூனியர் ஹாக்கி போட்டியில், வேலுாரில் இம்மாதம், 19ல் துவங்கி, 24ம் தேதி வரை நடக்கிறது.
போட்டியில், சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாநில முழுதும் இருந்து, அணிகள் பங்கேற்கின்றன.
இதில், சென்னை மாவட்ட அணிக்கான தேர்வு போட்டி, இன்று காலை, 6:30 மணிக்கு, கீழ்ப்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
தேர்வில், 2009 ஜன., 1க்கு பின் பிறந்த வீரர்கள் பங்கேற்கலாம் என, சென்னை மாவட்ட ஹாக்கி சங்கம் தெரிவித்துள்ளது.