ராமாபரத்தில் இருந்து புதிய பஸ்கள் துவக்கம்
ராமாபுரத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு ஏழு புதிய பேருந்துகளை நேற்று அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
ராமாபுரத்தில் இருந்து வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணா மேம்பாலம், அண்ணாசாலை, எல்.ஐ.சி., வழியாக பிராட்வே செல்லும் தடம் எண் 26, கிண்டி, நந்தனம், சென்ட்ரல் வழியாக பிராட்வே செல்லும் 18 இ, கிண்டி, அடையாறு, சாந்தோம், அண்ணா சதுக்கம், தலைமைச் செயலகம் வழியாக பிராட்வே செல்லும் 21 இ, நெசப்பாக்கம், கே.கே.நகர், அசோக் பில்லர், ஈக்காட்டுத்தாங்கல், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் வழியாக கிளாம்பாக்கம் செல்லும் 70 சி ஆகிய நான்கு வழித்தடங்களில் பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டன. இந்த நான்கு வழித்தடங்களில் புதிதாக ஏழு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்து சேவையை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்றிரவு கொடி அசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ., கணபதி, 154 வது வார்டு கவுன்சிலர் செல்வகுமார் மற்றும் மாநகர போக்குவரத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.